குழந்தைகளுக்கான தடுப்பூசி சோதனை முடிவு செப்டம்பரில் வெளியாகும்: எய்ம்ஸ் இயக்குநா் ரண்தீப் குலேரியா

பாரத் பயோடெக் நிறுவனத்தின் குழந்தைகளுக்கான கோவாக்சின் தடுப்பூசியின் சோதனைகள் தற்போது நடைபெற்று வருகின்றன, இதற்கான முடிவுகள் செப்டம்பர் மாதத்திற்குள் வெளியாகும்
தில்லி எய்ம்ஸ் இயக்‍குநர் டாக்டா் ரண்தீப் குலேரியா
தில்லி எய்ம்ஸ் இயக்‍குநர் டாக்டா் ரண்தீப் குலேரியா


புதுதில்லி:  பாரத் பயோடெக் நிறுவனத்தின் குழந்தைகளுக்கான கோவாக்சின் தடுப்பூசியின் சோதனைகள் தற்போது நடைபெற்று வருகின்றன, இதற்கான முடிவுகள் செப்டம்பர் மாதத்திற்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக  தில்லி எய்ம்ஸ் இயக்‍குநர் டாக்டா் ரண்தீப் குலேரியா தெரிவித்தார்.

கரோனா முதல் அலையின்போது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மூடப்பட்ட பள்ளிகள் தற்போது வரை முழுமையாக திறக்‍கப்படவில்லை. முதல் அலை ஓய்ந்தபோது, சில மாநிலங்களில் மட்டும் உயர் வகுப்பு மாணவர்களுக்‍கு மட்டும் பள்ளிகள் திறக்‍கப்பட்ட நிலையில், இரண்டாம் அலை தொடங்கியவுடன் சில நாள்களிலேயே மீண்டும் மூடப்பட்டன. அதனையடுத்து பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. நடப்பு கல்வியாண்டுக்கான பாடங்கள் ஆன்லைனில் மாணவர்களுக்‍கு எடுக்‍கப்பட்டு வருகிறது. 

மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து எடுத்து வந்த கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அடுத்து தற்போது இரண்டாது அலையின் பாதிப்பு குறைந்து வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது 18 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் கோவிஷீல்டு அல்லது கோவாக்சின் போன்ற ஏதாவதுதொரு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது நாடு முழுவதும் 42 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இரண்டு தவணை தடுப்பூசிகளையும் போட்ட பின்னர் சிறந்த பலன்களை தந்துள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாவிட்டால் மூன்றாவது அலையை எதிர்கொள்ள நேரிடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ள நிலையில், 
அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்வதே அடுத்தடுத்த அலைகளின் பாதிப்பில் இருந்து தப்பிப்பதற்கான சிறந்த வழியாகும்.

ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியை குழந்தைகளுக்கு வழங்கி பரிசோதிக்கும் முதல் சோதனை தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த ஜூன் 7 ஆம் தேதி தொடங்கியது. 

தற்போது இரண்டாவது கட்ட பரிசோதனையும் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. மூன்றாவது கட்ட பரிசோதனைகள்ல் முடிவடைந்தால் செப்டம்பர் முதல் குழந்தைகளுக்கு செலுத்த அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், குழந்தைகளுக்காக தயாரிக்கப்பட்டுள்ள கோவாக்சின் தடுப்பூசியின் மூன்றாவது கட்ட பரிசோதனை முடிவுகள் முடிவடைந்து செப்டம்பர் மாதத்தில் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு முடிவுகள் வெளியானால் அந்த தடுப்பூசியை குழந்தைகளுக்கு செலுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். 

செப்டம்பர் மாதத்தில் இருந்து 2 முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்கு கோவாக்சின் கரோனா தடுப்பூசி செலுத்த வாய்ப்பு ஏற்படும். 

வளர்ந்து வரும் தொற்றின் வகைகளுக்கு ஏற்ப கரோனா தடுப்பூசிகளுக்கு பூஸ்டர் தேவைப்படலாம் என்று எய்ம்ஸ் இயக்‍குநர் டாக்டா் ரண்தீப் குலேரியா கூறினார். 

மேலும், சரியான கண்காணிப்புடன், பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் பள்ளிகளை திறக்‍கலாம் என மத்திய அரசுக்‍கு பரிந்துரைள்ள எய்ம்ஸ் இயக்‍குநர் குலேரியா, பள்ளிகளில் மாணவர்கள் நேரடியாக பாடம் கற்பது முக்‍கியமானது. ஒரு மாணவரின் தனிப்பட்ட குணத்தையும், பழக்‍க வழக்‍கங்களையும் அது தீர்மானிப்பதாகவும் ரண்தீப் குலேரியா கூறினயுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com