
ஹிமாச்சலில் நிலச்சரிவால் பாலம் இடிந்து விழுந்ததில் 9 பேர் பலியானார்கள்.
ஹிமாச்சல் மாநிலம், கின்னார் மாவட்டத்தில் நிலச்சரிவு காரணமாக அங்குள்ள பாலம் இன்று இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 9 பேர் பலியானார்கள். 3 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் சில வாகனங்களும் சேதடைந்தன.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக்குழுவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். நிலச்சரிவின் போது பெரிய பாறைகள் உருண்டு வந்து பாலத்தின் மீது விழும் காட்சி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
இதனிடையே சங்லா-சிட்குல் சாலையில் பட்சேரி அருகே பல நிலச்சரிவுகள் ஏற்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.