
எல்லைப் பாதுகாப்புப் படை இயக்குநர் ஜெனரலாக இருக்கும் ராகேஷ் அஸ்தானா தில்லி காவல் துறை ஆணையராக அடுத்த ஓராண்டுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.
குஜராத்தைச் சேர்ந்த 1984 -ஆம் ஆண்டு பிரிவு ஐபிஎஸ் அதிகாரி ராகேஷ் அஸ்தானா இம்மாதம் ஜூலை 31-ஆம் தேதி ஓய்வு பெற இருந்தார். அவருக்கு பொதுநோக்குடன் ஓராண்டு பணி நீடிப்பு வழங்கப்பட்டு தில்லி காவல் துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். உடனடியாக பொறுப்பேற்குமாறு உள்துறை அமைச்சகம் தனது உத்தரவில் கூறியுள்ளது.
எல்லை பாதுப்புப் படையில் தலைமைப் பொறுப்பேற்பதற்கு முன்பாக ராகேஷ் அஸ்தானா சிபிஐ சிறப்பு இயக்குநராகப் பணியாற்றி லாலு பிரசாதின் மாட்டுத் தீவன வழக்குகளைக் கையாண்டு அவர் சிறை செல்லக் காரணமாக இருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.