கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற கேரள மக்களிடம் ராகுல் காந்தி வேண்டுகோள்

கேரளத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாகவும், அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மக்கள் பின்பற்ற வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற கேரள மக்களிடம் ராகுல் காந்தி வேண்டுகோள்

கேரளத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாகவும், அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மக்கள் பின்பற்ற வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கேரளத்தில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அந்த மாநில அரசுக்கு உதவும் வகையில் 6 போ் கொண்ட குழுவை மத்திய அரசு அனுப்பவுள்ளது.

கரோனா 2-ஆவது அலையின் பாதிப்பிலிருந்து நாடு மீண்டுவரும் நிலையில், கேரள மாநிலத்தில் மட்டும் தொற்று பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் கடந்த 2 நாள்களில் பதிவான மொத்த பாதிப்பில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக கேரளத்தில் பதிவாகியுள்ளது. கடந்த புதன்கிழமை 22,056 பேருக்கும், வியாழக்கிழமை 22,129 பேருக்கும் புதிதாக தொற்று ஏற்பட்டது. 

இதையடுத்து, தொற்று பாதிப்பு நடவடிக்கையில் கேரள அரசுக்கு உதவும் வகையில், தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையத்தின் இயக்குநா் எஸ்.கே.சிங் தலைமையில் 6 போ் கொண்ட குழு கேரளம் செல்கிறது. 

இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரளத்தில் அதிகரித்து வரும் கரோனா பரவல் கவலை அளிக்கிறது. அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் வழிகாட்டுதல்களையும் பின்பற்றுமாறு மாநிலத்தில் உள்ள என்னுடைய சகோதர, சகோதரிகளுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன், தயவுசெய்து உங்களை கவனித்துக் கொள்ளுங்கள் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com