30 லட்சம் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் ஹைதராபாத் வந்தடைந்தன

ரஷியாவில் தயாரிக்கப்பட்ட 30 லட்சம் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் தனி சரக்கு விமானம் மூலம் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4 மணியளவில் ஹைதராபாத் வந்தடைந்தன.

கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு ரஷியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி ஸ்புட்னிக் வி தடுப்பூசி. இந்தத் தடுப்பூசியைக் கையாள்வதில் பிரத்யேக சவால்கள் உள்ளன. -20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் தடுப்பூசியைப் பாதுகாக்க வேண்டும். 

இந்தியாவில் ரெட்டி ஆய்வக நிறுவனம் ஸ்புட்னிக் வி தடுப்பூசி நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. ரெட்டி ஆய்வக நிறுவனம் ஏற்கெனவே 2 லட்சத்துக்கும் மேலான தடுப்பூசிகளைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில், 30 லட்சம் தடுப்பூசிகள் ஹைதராபாத் வந்தடைந்துள்ளன. நாட்டில் இதுவரை இறக்குமதி செய்யப்பட்ட கரோனா தடுப்பூசிகளில் இன்று வந்தடைந்ததே அதிகபட்சமாகும். 56.6 டன் அளவில் இன்று இறக்குமதி செய்யப்பட்டன. இறக்குமதி செய்யப்பட்ட தடுப்பூசிகள் அனைத்தும் 90 நிமிடங்களில் பிரித்து அனுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com