
சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தேர்வை ரத்து செய்தது பிரதமர் நரேந்திர மோடியின் வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கை என்று மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார்.
மாணவர்களில் நலன் கருதி இந்த நடவடிக்கையை பிரதமர் மோடி எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
கரோனா பரவல் காரணமாக சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி உடனான ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு நேற்று அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது, பிரதமர் மோடி எப்போதும் மாற்றுக் கருத்தை முன்வைப்பவர். ஆனால் மாணவர்களின் நலன் மற்றும் ஆரோக்கியத்தை விட அவருக்கு பெரிய மாற்றுக் கருத்து இல்லை.
பொதுத்தேர்வை ரத்து செய்வதற்கு முன்பு இது தொடர்பாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியத் தலைவர், செயலாளர், உறுப்பினர்கள், மாநில கல்வித் துறை அமைச்சர்கள், மாநில செயலாளர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வியியலாளர்கள் என அனைவரும் இந்த முடிவை வரவேற்பார்கள் என்று நம்புகிறேன் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.