தர்பங்கா: தனது கல்விச் செலவு முழுவதையும் தானே ஏற்பதாக பிரியங்கா காந்தி உறுதிமொழி அளித்திருப்பதாக பிகாரின் சைக்கிள் சிறுமி ஜோதி குமாரி கூறியுள்ளார்.
பிகாரின் சைக்கிள் சிறுமி என்று அறியப்படும் ஜோதி குமாரியின் தந்தை காலமான நிலையில், அவரது கல்விச் செலவை காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஏற்றுக் கொண்டுள்ளதாக அந்தச் சிறுமி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு பொது முடக்கத்தின் போது ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு சைக்கிளில் பயணித்து தனது தந்தையை மீட்டு வந்ததன் மூலம் நன்கு அறியப்பட்டவரானார் ஜோதி குமாரி.
கடந்த வாரம் ஜோதி குமாரியின் தந்தை மாரடைப்பால் மரணமடைந்த நிலையில், தொலைபேசி வாயிலாக ஜோதியை தொடர்பு கொண்ட பிரியங்கா காந்தி, தந்தையின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும்," பிரியங்கா காந்தி என்னிடம் கூறினார். எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். உன்னுடைய கல்வி தடைபடாமல் தொடர நான் உதவுகிறேன். கல்வி உள்ளிட்ட இதர செலவுகள் அனைத்தையும் தானே ஏற்றுக் கொள்வதாகவும் உறுதி அளித்திருக்கிறார் என்று ஜோதி குமாரி கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


