
கரோனா தொற்று பரவல் காரணமாக சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து மாணவர்களுக்கு மதிப்பெண்களை மதிபீடு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று பரவல் காரணமாக நடைபெற இருந்த சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வை ரத்து செய்து பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டார்.
இந்நிலையில் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் மாணவர்களுக்கு எந்தவகையில் மதிப்பெண் வழங்குவது என்கிற கேள்வி எழுந்தது. இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு மதிப்பெண் மதிப்பீடு செய்வது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சகத்தின் இணைச் செயலாளர் விபின் குமார் தலைமையில் 12 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக 10 நாள்களுக்கும் அறிக்கை வழங்கும் என சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.