பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நாளை மறுநாள் காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய போராட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை(ஜூன்.11) காங்கிரஸ் சார்பில் நாடுதழுவிய போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலை
தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலை
Published on
Updated on
1 min read


புதுதில்லி: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை(ஜூன்.11) காங்கிரஸ் சார்பில் நாடுதழுவிய போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிப்பொருள்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

தலைநகர் தில்லி, மகாராஷ்டிரம், மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.100-ஐ தாண்டியுள்ளது. தமிழகத்தில் பெட்ரோல் ரூ.100-ஐ நெருங்குகிறது. புதன்கிழமை காலை சென்னையில் ஒரு லிட்டர்ரூ.96.94 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.91.15 ஆக விற்னை செய்யப்பட்டு வருகிறது. 

கரோனா பொதுமுடக்கம் அமலால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை அனுபவித்து வரும் சூழலில், நமது நாட்டில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிப்பொருள்களின் விலை தொடர்ந்து உயா்த்தப்பட்டு வருகிறது. இந்த விலை உயா்வு காரணமாக மக்கள் பயன்படுத்தக்கூடிய அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலை பல மடங்கு உயா்ந்து வருகிறது.

இந்நிலையில்,  பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை(ஜூன்.11) காங்கிரஸ் சார்பில் நாடுதழுவிய போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதொடர்பாக காங்கிரஸ் தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,  பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் தொடர் விலை உயர்வுக்கு எதிராக நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் நிலையங்களுக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமை( ஜூன் 11) காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய அளவில் அடையாளம் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com