அலகாபாத் உயர் நீதிமன்ற நிதிபதியாக சஞ்சய் யாதவ் நியமனம்

அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக, நீதிபதி சஞ்சய் யாதவை குடியரசுத் தலைவர் நியமனம் செய்துள்ளார்.  
அலகாபாத் உயர் நீதிமன்ற நிதிபதியாக சஞ்சய் யாதவ் நியமனம்
Published on
Updated on
1 min read

அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக, நீதிபதி சஞ்சய் யாதவை குடியரசுத் தலைவர் நியமனம் செய்துள்ளார். 
இதுதொடர்பான அறிவிப்பை சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் நீதி துறை இன்று வெளியிட்டுள்ளது. 1986-ம் ஆண்டு வழக்கறிஞராக பயணத்தை தொடங்கிய அவர் 1999 மார் முதல் 2005 அக்டோபர் வரை வழக்கறிஞராகவும், 2005 முதல் துணை தலைமை வழக்கறிஞராக பணியாற்றியிருக்கிறார். 
அதைத்தொடர்ந்து மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக 2007 ஆண்டிலும், நிரந்தர நீதிபதியாக 2010 ஆண்டிலும் அவர் நியமிக்கப்பட்டார். பின்னர் அவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். 
இதையடுத்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியாக 2021 ஏப்ரல் 14 வரை அவர் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com