கரோனா 2வது அலைக்கு 30 கர்ப்பிணிகள் பலி: ஐசிஎம்ஆர் தகவல்

கரோனா இரண்டாம் அலைக்கு 1,530 கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 30 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்


கரோனா இரண்டாம் அலைக்கு 1,530 கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 30 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 

2019 டிசம்பர் முதல் உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா பெருந்தொற்றின் முதல் அலை குழந்தைகள், முதியவர்களை அதிகயளவில் தாக்கிய நிலையில், தொற்றின் இரண்டாவது அலை அனைத்து வயதினரையும் பாரபட்சமின்றி தாக்கி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கர்ப்பிணிகளை அதிகளவில் தாக்கியுள்ளது. 

இந்நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலைக்கு கர்ப்பிணிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது. 

பெருந்தொற்றின் முதல் அலையில் 1,143 கர்ப்பிணிகள் பாதிக்கப்பட்டதாகவும், இவர்களில் 162 பேருக்கு மட்டும் தொற்று அறிகுறிகள் இருந்ததாகவும் அதாவது 14.2 சதவீதம் பெண்களுக்கு தொற்று அறிகுறிகள் இருந்ததாகவும் உயிரிழப்பு சதவீதம் 0.7-ஆக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பெருந்தொற்றின் இரண்டாவது அலையில் இதுவரை 387 கர்ப்பிணிகளுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதில் 111 பேருக்கு தொற்று பாதிப்பு அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. அதாவது 28.7 சதவீதம் பேருக்கு தொற்று அறிகுறிகள் அதிகமாக இருந்ததாவும், இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழப்பு வீதம் 5.7 சதவீதமாக அதிகரித்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும், இரண்டு அலைகளிலும் இதுவரை 1,530 கர்ப்பிணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 30 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கர்ப்பிணி பெண்களுக்கும் தடுப்பூசி: கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டும் பெண்களுக்கும் தடுப்பூசி செலுத்த முடியாத காரணத்தால், அவர்களை பாதிப்பில் இருந்து காப்பதில் சிக்கல் நீடித்தது. எனினும், சில கர்ப்பிணிகள் தங்களது மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர்.

இந்நிலையில், கரோனா பெருந்தொற்றின் முதல் மற்றும்  இரண்டாவது அலையில் கர்ப்பிணி பெண்கள் தொற்று நிமோனியாவால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. கர்ப்பிணி அல்லாத பெண்களுடன் ஒப்பிடும்போது கர்ப்பிணிப் பெண்களுக்கு கரோனா தொடர்பான பாதிப்பால் அதிகயளவில் ஆபத்து இருப்பது தெரியவந்துள்ளதால், அத்தகைய பெண்களைப் பாதுகாப்பது முக்கியமான பணியாக உள்ளது. எனவே, தடுப்பூசி செலுத்துவதில் அதிக முன்னுரிமை அளிக்க வேண்டியவர்களின் பட்டியலில் கர்ப்பிணிப் பெண்களையும் சேர்த்து தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று ஐ.சி.எம்.ஆர். பரிந்துரை செய்துள்ளது. 

கரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட முதல் 20 நாடுகளில், ஒன்பது நாடுகள் கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி போட அனுமதிக்கின்றன, அங்கு முன்னுரிமையில் உள்ள இரண்டு தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன. 

இதுவரை பாலூட்டும் தாய்மார்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்த அனுமதி அளித்து வந்த மத்திய அரசு, தொற்றுக்கு எதிராக கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்து மத்திய அரசு இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com