'மோடி அரசின் வளர்ச்சி இதுதான்' - எரிபொருள் விலை உயர்வு குறித்து ராகுல் காந்தி சாடல்!

பெட்ரோல், டீசல் விலை ஒருநாள் அதிகரிக்காவிட்டால், அது ஒரு பெரிய செய்தியாக மாறும் என்பதுதான் மோடி அரசின் வளர்ச்சியின் நிலை என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 
ராகுல் காந்தி
ராகுல் காந்தி

பெட்ரோல், டீசல் விலை ஒருநாள் அதிகரிக்காவிட்டால், அது ஒரு பெரிய செய்தியாக மாறும் என்பதுதான் மோடி அரசின் வளர்ச்சி என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் முக்கிய  நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 100-யைத் தாண்டியுள்ளது. பெட்ரோல் விலை உயர்வு குறித்து எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும் தொடர்ந்து மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார். 

இந்நிலையில் இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 

பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாத அரிய நாள் இன்று. விலைகள் தினமும் அதிகரிக்கப்படுகின்றன என்பதை இது காட்டுகிறது. 

பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஒருநாள் அதிகரிக்காவிட்டால், அது ஒரு பெரிய செய்தியாக மாறும் என்பதுதான் மோடி அரசின் வளர்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார். 

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 98.24, ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 92.40 ஆக உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com