
தடுப்பூசிகளுக்கு எதிராக வதந்தி பரப்புவோரிடமிருந்து மக்களை பாதுகாக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச யோகாதினம் இன்று (ஜூன் 21) கொண்டாடப்படுவதையொட்டி தமது இல்லத்தில் அமைச்சர் ஹர்ஷ் வர்தன் யோகாசனங்களை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, தடுப்பூசிகளுக்கு எதிராக வதந்தி பரப்புவோரிடமிருந்து மக்களை பாதுகாக்க வேண்டும்.
கரோனா தடுப்பூசிகளுக்கு எதிரான வதந்திகள் ஏழை மக்களுக்குத்தான் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று கூறினார்.
கரோனா தடுப்பூசி குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.