வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

ம.பி.யில் அதிகபட்சமாக இன்று 17 லட்சம் பேருக்குத் தடுப்பூசி: சுகாதாரத் துறை

மத்தியப் பிரதேசத்தில் இன்று (ஜூன் 22) அதிகபட்சமாக 17 லட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார். 

News image
ம.பி.யில் அதிகபட்சமாக 17 லட்சம் பேருக்குத் தடுப்பூசி: சுகாதாரத் துறை
Updated On :22 ஜூன் 2021, 12:50 pm

DIN

மத்தியப் பிரதேசத்தில் இன்று (ஜூன் 22) அதிகபட்சமாக 17 லட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார். 

நாட்டில் உள்ள மற்ற மாநிலங்களை விட இது அதிகமாகும். இதற்கு அடுத்தபடியாக கர்நாடகத்தில் இன்று அதிக எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷண்
பேசியதாவது, மத்தியப் பிரதேசத்தில் இன்று அதிகபட்சமாக 17 லட்சம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக கர்நாடகத்தில் 11 லட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுள்ளது. 

அதனைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசத்தில் 7 லட்சம் தடுப்பூசிகளும், பிகாரில் 5.75 லட்சம் தடுப்பூசிகளும், ஹரியாணா மற்றும் குஜராத்தில் 5.15 லட்சம் தடுப்பூசிகளும், ராஜஸ்தானில் 4.60 லட்சம் தடுப்பூசிகளும், தமிழ்நாட்டில் 3.97 லட்சம் தடுப்பூசிகளும், மகாராஷ்டிரத்தில் 3.85 லட்சம் தடுப்பூசிகளும், அசாமில் 3.68 லட்சம் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.