ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

கேஜரிவால் செய்தியாளர்களை சந்திக்க அனுமதி இல்லை: பஞ்சாப் அரசு

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் செய்தியாளர்களைச் சந்திப்பதற்கு அனுமதி அளிக்க பஞ்சாப் முதல்வர் அலுவலகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

News image
Updated On :28 ஜூன் 2021, 10:12 am

DIN


தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் செய்தியாளர்களைச் சந்திப்பதற்கு அனுமதி அளிக்க பஞ்சாப் முதல்வர் அலுவலகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

பஞ்சாபில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு தேர்தலுக்கான பணிகளில் ஆம் ஆத்மி கட்சி ஈடுபட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பஞ்சாபிற்கு சென்று வருகிறார். அந்தவகையில் பஞ்சாபில் செய்தியாளர்களைச் சந்திக்க பஞ்சாப் முதல்வர் அலுவலகத்தில் ஆம் ஆத்மி சார்பில் அனுமதி கோரப்பட்டது.

இதற்கு பஞ்சாப் முதல்வர் அலுவலகம் மறுப்பு தெரிவித்துள்ளது. நாளை காலை 1 மணியளவில் செய்தியாளர்களை சந்திக்க அனுமதி கோரப்பட்ட நிலையில், அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

பஞ்சாப் அரசு அனுமதி தர மறுத்தாலும், திட்டமிட்டபடி செய்தியாளர் சந்திப்பு நடைபெறும் என்று ஆம் ஆத்மி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017- சட்டப்பேரவைத் தேர்தல்:

2017 பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் காங்கிரஸ் 77 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது. ஆம் ஆத்மி 20 இடங்களில் வென்று இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது. முன்பு ஆட்சியிலிருந்த சிரோமணி அகாலி தளம் 15 இடங்களிலும் பாஜக 3 இடங்களிலும் மட்டுமே வென்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.