34,760 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் சிறப்பு ரயில்கள் மூலம் விநியோகம்

நாடு முழுவதும் இதுவரை 34760 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் சிறப்பு ரயில்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
34,760 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் சிறப்பு ரயில்கள் மூலம் விநியோகம்

நாடு முழுவதும் இதுவரை 34760 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் சிறப்பு ரயில்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து ரயில்வேதுறை வெளியிட்ட தகவலில், பல்வேறு தடைகளையும் கடந்து நாடு முழுவதும் திரவ மருத்துவப் பிராணவாயுவை ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களின் மூலம் இந்திய ரயில்வே விநியோகித்து வருகிறது. 34000 மெட்ரிக் டன்னிற்கும் அதிகமான திரவ மருத்துவப் பிராணவாயுவை ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நாடு முழுவதும் கொண்டு சேர்த்து முக்கிய மைல்கல்லை கடந்துள்ளன. 

இதுவரை 1,976 டேங்கா்களில் 34,760 மெட்ரிக் டன் பிராணவாயு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. 

474 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் மாநிலங்களுக்கு மருத்துவப் பிராணவாயு வழங்கப்பட்டுள்ளது. தென் மாநிலங்களுக்கு 20000 மெட்ரிக் டன் திரவ மருத்துவப் பிராணவாயுவை ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் விநியோகம் செய்துள்ளன. தமிழகம், தெலங்கானா, ஆந்திர பிரதேசம், கா்நாடக மாநிலங்களுக்கு முறையே சுமாா் 6476, 3,700, 4,800 மற்றும் 4,700 மெட்ரிக் டன் பிராணவாயு வழங்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு, உத்தரகண்ட், கா்நாடகம், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், ஆந்திரம், ராஜஸ்தான், ஹரியாணா, தெலங்கானா, பஞ்சாப், கேரளம், தில்லி, உத்தரபிரதேசம், ஜாா்க்கண்ட், அஸ்ஸாம் ஆகிய 15 மாநிலங்கள் இதுவரை பிராணவாயுவைப் பெற்றுள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com