சத்தீஸ்கர் காவல்துறையில் 13 திருநங்கைகள் காவலர்களாக நியமனம்
சத்தீஸ்கர் மாநிலத்தின் காவல்துறையின் காவலர் பணிக்கு 13 திருநங்கைகள் நியமனம் செய்யப்பட்டிருப்பது பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தின் 2019-20ஆம் ஆண்டுக்கான காவலர் தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியானது. இதில் கான்ஸ்டபிள் பணிக்கு 13 திருநங்கைகள் தேர்வு பெற்றுள்ளனர்.
தேர்வான திருநங்கைகள் மாநிலத்தின் நான்கு மாவட்டங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து மாநில காவல்துறை இயக்குனர் டி.எம்.அவஸ்தி, காவலர்களாக தேர்வு பெற்றுள்ள திருநங்கைகளுக்கு தனிப்பட்ட முறையில் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.
தற்போது வரை நாட்டில் தமிழ்நாடு மற்றும் ராஜஸ்தானில் மட்டுமே திருநங்கைகள் காவலர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.