
கேரள பாஜகவில் இணைந்த 6 நாள்களிலேயே மெட்ரோ மேன் என அழைக்கப்படும் ஸ்ரீதரன் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் முதன் முதலில் மெட்ரோ ரயில் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியதற்காக ‘மெட்ரோமேன்’ என்று அழைக்கப்பட்டு வருவபவர் இ.ஸ்ரீதரன். இவர் கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி கேரள பாஜகவில் இணைந்தார்.
கேரள மாநிலம் மலப்புரத்தில் பாஜக மாநிலத் தலைவர் சுரேந்திரன் தலைமையில் நடைபெற்ற விஜய் யாத்ராவில் மத்திய அமைச்சர் ஆர்கே சிங் முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்தார்.
இந்நிலையில் கட்சியில் இணைந்த ஒரு வாரத்திற்குள்ளாகவே ஸ்ரீதரன் நடைபெற உள்ள கேரள சட்டபேரவைத் தேர்தலில் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளார்.
இதுதொடர்பான அறிவிப்பை மாநில பாஜக தலைவர் சுரேந்திரன் வியாழக்கிழமை வெளியிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.