புதுவை தேர்தல்: காங்கிரஸ் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் நாராயணசாமி பெயரில்லை

​புதுச்சேரி பேரவைத் தேர்தலில் 14 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


புதுச்சேரி பேரவைத் தேர்தலில் 14 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

புதுச்சேரி பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 15 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் 14 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. இதில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி பெயர் இடம்பெறவில்லை.

காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்:

  1. ஊசுடு - கார்த்திகேயன்
  2. கதிர்காமம் - பி. செல்வநாதன்
  3. இந்திரா நகர் - எம். கண்ணன்
  4. காமராஜ் நகர் - எம்.ஓ.ஹெச்.எஃப். ஷாஜகான்
  5. லாஸ்பேட்டை - எம். வைத்தியநாதன்
  6. முத்தியால்பேட்டை - எஸ். செந்தில் குமரன்
  7. அரியாங்குப்பம் - டி. ஜெயமூர்த்தி
  8. மணவெளி - ஆர்.கே.ஆர். அனந்தராமன்
  9. ஏம்பலம் - எம். கந்தசாமி
  10. நெட்டப்பாக்கம் - விஜயவேணி
  11. நெடுங்காடு - ஏ. மாரிமுத்து
  12. திருநள்ளாறு - ஆர். கமலக்கண்ணன்
  13. காரைக்கால் தெற்கு - ஏ.வி. சுப்ரமணியன்
  14. மாஹே - ரமேஷ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com