
ஸ்ரீநகரில் நிஷாத் பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) சார்பில் இலவச மருத்துவ சுகாதார பரிசோதனை முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு மருந்துகள் இலவசமாக விநியோகிக்கப்பட்டது.
சி.ஆர்.பி.எஃப்-யின் 54 பட்டாலியனால் இந்த சுகாதார முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.
மருத்துவ முகாம் பொது மக்களைச் சென்றடைய இது ஒரு வழியாகும். இந்த திட்டத்தை ஸ்ரீநகர் முழுவதும் ஆறு இடங்களில் நடத்தப்படுகிறது என்று சிஆர்பிஎஃப் அதிகாரி வி.பி.திரிபாதி தெரிவித்தார்.
இந்த முகாமில் பொதுவான நோய்கள் மற்றும் பருவகால நோய்களுக்கு சிகிச்சையளிக்கிறோம். மேலும், மருத்துவ நிபுணர்கள் ஈடுபடுத்தவேண்டிய அவசியம் இருப்பினும், அதையும் வழங்கத் தயாராக உள்ளோம் என்று அவர் கூறினார்.
சிஆர்பிஎஃப் சார்பில் நடத்தப்படும் இந்த மருத்துவ முகாமை அப்பகுதியில் வசிப்பவர்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.