மகாராஷ்டிரம்: ரசாயன தொழிற்சாலையில் வெடிவிபத்து; 4 பேர் பலி

மகாராஷ்டிரத்தின், ரத்னகிரி மாவட்டத்தில் ரசாயன தொழிற்சாலையில் இன்று காலை அடுத்தடுத்து வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. 
மகாராஷ்டிரம் ரசாயன தொழிற்சாலையில் வெடிவிபத்து: 4 பேர் பலி
மகாராஷ்டிரம் ரசாயன தொழிற்சாலையில் வெடிவிபத்து: 4 பேர் பலி

மகாராஷ்டிரத்தின், ரத்னகிரி மாவட்டத்தில் ரசாயன தொழிற்சாலையில் இன்று காலை அடுத்தடுத்து வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. 

கெத் தாலுகாவில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் உள்ள ஒரு அலகுகளில் இன்று காலை 9 மணியளவில் இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. 

வெடி விபத்தைத் தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சுமார் 40-க்கும் மேற்பட்டோர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

இந்த சம்பவத்தில் காயமடைந்த தொழிலாளர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நான்கு பேர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

பலத்த காயம் அடைந்த மற்றொரு தொழிலாளி சிகிச்சை பெற்று வருவதாக ரத்னகிரியைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி கூறினார்.

முதற்கட்ட விசாரணையில், தொழிற்சாலையில் உள்ள ஒரு கொதிகலனில் அதிக வெப்பம் ஏற்பட்டதன் காரணமாக வெடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகின்றது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com