
உத்தரப் பிரதேசத்தில் போலி மதுபானம் அருந்திய 4 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், சித்ரகூட் மாவட்டத்தில் உள்ள ராஜபூர் பகுதியில் சனிக்கிழமை இரவு போலி மதுபானத்தை வாங்கிய அருந்திய சிலருக்கு திடீா் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
அவா்களை அங்கிருந்தவா்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனா். ஆனால், அவா்களில் 4 போ் உயிரிழந்தனா். 2 பேருக்கு அலகாபாத் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் தொடர்பாக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அத்துடன் போலி மதுபான விற்பனையை தடுக்கத் தவறியதாக துணைக் காவல் ஆய்வாளர் உள்பட 2 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.