அசாம் சட்டப்பேரவைத் தேர்தல்: பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு

அசாம் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பாஜக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.

அசாம் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 27 முதல் 3 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான பிரசாரத்தில் தேசிய தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தி வரும் நிலையில் பாஜக செவ்வாய்க்கிழமை தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.

இந்த நிகழ்வில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டு தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து பேசிய அவர், பாஜக ஆட்சிக்கு வந்தால் அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்பட்டு மக்களின் குடியுரிமை பாதுகாக்கப்படும் எனவும் மாநிலத்தின் அரசியல் உரிமைகள் பாதுகாக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் அசாம் மாநில முதல்வர் சர்பானந்தா சோனோவால், மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆகியோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com