வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

தில்லி துணைநிலை ஆளுநருக்கு முதன்மை அதிகாரம்: கேஜரிவால் கருத்து

தில்லி அரசில் துணைநிலை ஆளுநருக்கு முதன்மை அதிகாரம் வழங்கும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது ஜனநாயகத்தின்  மோசமான நாள் என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

News image
தில்லி துணைநிலை ஆளுநருக்கு முதன்மை அதிகாரம் நிறைவேற்றம்: கேஜரிவால் கருத்து
Updated On :25 மார்ச் 2021, 10:17 am

DIN

தில்லி அரசில் துணைநிலை ஆளுநருக்கு முதன்மை அதிகாரம் வழங்கும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது ஜனநாயகத்தின்  மோசமான நாள் என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

தில்லி அரசு திருத்த மசோதா, 2021-இன்படி, அந்த யூனியன் பிரதேச நிா்வாகத்தில் துணைநிலை ஆளுநருக்கு முதன்மை அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் எந்தவொரு நிா்வாக நடவடிக்கை தொடா்பாக முடிவு எடுக்கும் முன்னா், அதுகுறித்து துணைநிலை ஆளுநரின் கருத்தை தில்லி அரசு பெற வேண்டியதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு மார்ச் 22-ல் நிறைவேற்றப்பட்ட நிலையில், கடும் அமளிக்கு மத்தியில் மாநிலங்களவையிலும் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது. 

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், துணை நிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் மசோதா நிறைவேற்றபட்டது ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட மோசமான நாளாகும் எனக் குறிப்பிட்டார். 

‘மக்களுக்கான அதிகாரத்தை மீட்டெடுப்பதற்கான எங்கள் போராட்டத்தை நாங்கள் தொடருவோம். என்ன தடைகள் இருந்தாலும், நாங்கள் தொடர்ந்து எங்கள் பணிகளைச் செய்வோம்” என கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகர்ஜூன் கார்கே உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள், இந்த மசோதாவை நாடாளுமன்ற தேர்வுக் குழுவிற்கு அனுப்ப பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.