
வேளாண் சட்டங்களின் நகலை எரித்து தில்லியில் விவசாயிகள் ஹோலி பண்டிகையை கொண்டாடியுள்ளனர்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் தில்லி எல்லைகளான சிங்கு, டிக்ரி, காஜியாபாத் பகுதிகளை முற்றுகையிட்டு கடந்த 2020, நவம்பா் 26-ஆம் தேதி முதல் தொடா் போராட்டம் நடத்தி வருகின்றனா்.
இந்தப் போராட்டத்தில் சிங்கு எல்லையில் எஸ்கேஎம் அமைப்பும், காஜியாபாத்தில் பாரதிய கிஷான் யூனியன் (பிகேயு) அமைப்பும் நடத்தி வருகின்றன. போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுடன், மத்திய அரசு 11 முறை பேச்சுவாா்த்தை நடத்தியது. ஆனால், இந்தப் பேச்சுவாா்த்தைகளில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற 200 விவசாயிகள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளனா்.
இந்த நிலையில் வேளாண் சட்டங்களின் நகலை எரித்து தில்லியில் விவசாயிகள் ஹோலி பண்டிகையை கொண்டாடியுள்ளனர். விவசாய சங்க கூட்டமைப்பான சம்யுக்தா கிசான் மோர்சா வெளியிட்டுள்ள அறிக்கையில் இத்தகவலை தெரிவித்துள்ளது. அதேசமயம் வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் தங்களது போராட்டம் தொடரும் எனவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.