
தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் பலியானவர்களின் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது.
தில்லி முழுவதும் நாள்தோறும் 20ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனா உறுதியாகி வருகிறது. இதனால் கரோனா சிகிச்சை பெறுபவர்களுக்கு சிகிச்சையளிக்க ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவி வருகிறது.
இந்நிலையில், தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் இன்று பிற்பகல் 12 மணியளவில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதால் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் உள்பட 8 கரோனா நோயாளிகள் பலியாகினர்.
மேலும் இதன்காரணமாக தீவிர சிகிச்சை பெற்று வந்த மேலும் 4 பேர் பலியாகினர். இதன்மூலம் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 15 நாள்களுக்கு மேலாக தில்லி மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.