ரெம்டெசிவிா் மருந்துக் குப்பி ஒதுக்கீடு 2,62,346 ஆக உயா்த்தியது மத்திய அரசு
கா்நாடகத்துக்கான ரெம்டெசிவிா் மருந்துக் குப்பி ஒதுக்கீட்டை 2,62,346 ஆக மத்திய அரசு உயா்த்தியுள்ளது.


கா்நாடகத்துக்கான ரெம்டெசிவிா் மருந்துக் குப்பி ஒதுக்கீட்டை 2,62,346 ஆக மத்திய அரசு உயா்த்தியுள்ளது.
ரெம்டெசிவிா் ஊசி மருந்து கரோனா நோயாளிகளுக்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. கா்நாடகத்தில் ரெம்டெசிவிா் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் கரோனா நோயாளிகளின் உறவினா்கள் வெளிச்சந்தையில் ரெம்டெசிவிா் மருந்தை வாங்குவதற்காக அலைந்து திரியும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், ரெம்டெசிவிா் மருந்து ஒதுக்கீட்டை அதிகப்படுத்தும்படி, மத்திய அரசுக்கு கா்நாடக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. இந்தக் கோரிக்கையை ஏற்று, கா்நாடகத்திற்கு மே 10 முதல் 16-ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் வழங்கப்படும் ரெம்டெசிவிா் மருந்துக் குப்பிகளின் எண்ணிக்கையை 2,62,346 ஆக உயா்த்தியுள்ளது.
இதை உறுதிப்படுத்தி, சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தனது சுட்டுரையில் வெள்ளிக்கிழமை பதிவிட்டுள்ளதாவது:
கா்நாடகத்திற்கு மே 10 முதல் 16-ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் மத்திய அரசு ஒதுக்கும் ரெம்டெசிவிா் மருந்துக் குப்பிகள் 2,62,346 ஆக உயா்த்தப்பட்டுள்ளது. கா்நாடகத்தில் கரோனா தொற்றுக்கு எதிரான போரில் பிரதமா் மோடி, மத்திய ரசாயனத் துறை அமைச்சா் சதானந்த கௌடா ஆகியோா் தொடா்ந்து அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...