சென்னை திருவிக நகரில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வேட்புமனு தாக்கல்!திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல்! சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

கிராமப்புறங்களில் அதிகரிக்கும் கரோனா: கேரள முதல்வர் கவலை

​கேரளத்தில் கரோனா பாதிப்பு கிராமப்புறங்களில் அதிகரிப்பது கவலையளிப்பதாக அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் திங்கள்கிழமை தெரிவித்தார்.

News image

கோப்புப்படம்

Updated On :10 மே 2021, 3:51 pm

DIN


கேரளத்தில் கரோனா பாதிப்பு கிராமப்புறங்களில் அதிகரிப்பது கவலையளிப்பதாக அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் திங்கள்கிழமை தெரிவித்தார்.

மாநில கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தகவல்களை முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர் சந்திப்பு மூலம் வெளியிட்டார். அப்போது அவர் பேசியது:

"72 பஞ்சாயத்துகளில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 50 சதவிகிதத்துக்கும் மேல் பதிவாகிறது. அதில் 19 பஞ்சாயத்துகள் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ளன. 300 பஞ்சாயத்துகளில் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 30 சதவிகிதத்துக்கும் மேல் உள்ளது.

57 பஞ்சாயத்துகளில் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 500 முதல் 2000 வரை உள்ளன. 

கண்ணூர், திருவனந்தபுரம் மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது. இந்த மாவட்டங்களில் கடுமையான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மற்ற மாவட்டங்களில் கரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.

மாநிலத்தில் 27,487 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் 99,748 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 27.56 சதவிகிதமாக உள்ளது" என்றார் பினராயி விஜயன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.