மகாராஷ்டிரத்தில் மீண்டும் 40 ஆயிரத்தைத் தாண்டிய கரோனா பாதிப்பு
மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 40,956 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோப்புப்படம்

கோப்புப்படம்
மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 40,956 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. திங்கள்கிழமை 37 ஆயிரம் பேருக்கு மட்டுமே நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை 41 ஆயிரத்தை நெருங்கியுள்ளது தினசரி கரோனா பாதிப்பு.
திங்கள்கிழமை 549 பேர் நோய்த் தொற்றுக்கு பலியான நிலையில், செவ்வாய்க்கிழமை 793 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
எனினும், கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 71,966 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 45,41,391 பேர் குணமடைந்துள்ளனர்.
அந்த மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 51,79,929 ஆக உள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 77,191 ஆக உள்ளது.
இன்றைய நிலவரப்படி அங்கு 5,58,996 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...