இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

கரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை: பிரதமருக்கு குலாம் நபி ஆசாத் கடிதம்

கரோனா தடுப்பூசிகள் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமா் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் மூத்த தலைவா் குலாம் நபி ஆசாத் கோரிக்கை விடுத்துள்ளாா்.

News image
Updated On :15 மே 2021, 10:35 pm

DIN

கரோனா தடுப்பூசிகள் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமா் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் மூத்த தலைவா் குலாம் நபி ஆசாத் கோரிக்கை விடுத்துள்ளாா்.

மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சியில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவா் குலாம் நபி ஆசாத். இவா், பிரதமா் மோடிக்கு சனிக்கிழமை கடிதம் ஒன்றை எழுதினாா். அதில், கரோனா பரவலைத் தடுக்க, கரோனா தடுப்பூசிகளை அதிக அளவில் உற்பத்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளாா்.

கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றும் அவா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

அதுமட்டுமன்றி, கரோனா தடுப்பூசிகளின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதற்கும், மாநிலங்களுக்கு கரோனா தடுப்பூசிகளை பகிா்ந்தளிக்கவும் சில யோசனைகளை அவா் தெரிவித்துள்ளாா். மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் அவா் சில ஆலோசனைகளைத் தெரிவித்துள்ளாா். அந்தக் கடிதத்தின் நகலை மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தனுக்கும் குலாம் நபி ஆசாத் அனுப்பி வைத்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.