
சுற்றுச்சூழல் ஆர்வலர் சுந்தர்லால் பகுகுணா கரோனா தொற்றால் உயிரிழந்தார். அவருக்கு வயது 94.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 8 ஆம் தேதி ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு அவரது உடல்நிலை மோசமடைந்ததாகவும், இன்று பிற்பகல் 12 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அவருக்கு பிரதமர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சுந்தர்லால் பகுகுணா மரங்கள், காடுகளைக் காக்க தொடர்ந்து பல்வேறு இயக்கத்தை முன்னெடுத்தவர். 1973 ஆம் ஆண்டு மரங்களைக் காக்க உத்தரகண்ட் சமோலி பகுதியில் பெண்கள் முன்னெடுத்த 'சிப்கோ' இயக்கத்தை தொடங்கிவைத்தவர்.
இவரது தொடர் போராட்டங்களின் காரணமாகவே 1980ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, மரங்களை வெட்டுவதற்கு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் சுந்தர்லால் பகுகுணா காந்தியக் கொள்கைகளை கொண்டிருந்தார். பல்வேறு போராட்டங்களில் காந்தியின் அகிம்சை கொள்கையை பின்பற்றினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.