ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

கருப்புப் பூஞ்சை சிகிச்சை மருந்து:மாநிலங்களுக்கு கூடுதல் ஒதுக்கீடு: சதானந்தா கௌடா

கூடுதலாக 23,680 குப்பிகள் ஆம்ஃபோடெரிசின்-பி மருந்து ஒதுக்கீடு செய்திருப்பதாக மத்திய ரசாயனங்கள் மற்றும் உரத்துறை அமைச்சா் டி.வி.சதானந்த கௌடா

News image
Updated On :22 மே 2021, 10:06 pm

DIN

பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கருப்புப் பூஞ்சை நோயைக் குணப்படுத்துவதற்காக, கூடுதலாக 23,680 குப்பிகள் ஆம்ஃபோடெரிசின்-பி மருந்து ஒதுக்கீடு செய்திருப்பதாக மத்திய ரசாயனங்கள் மற்றும் உரத்துறை அமைச்சா் டி.வி.சதானந்த கௌடா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தனது தனது சுட்டுரைப் பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

பல்வேறு மாநிலங்களில் கருப்புப் பூஞ்சை தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கையை விரிவாக ஆய்வு செய்ய பிறகு மருந்துகளின் ஒதுக்கீடு அளவு அதிகரிக்கச் செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் சுமாா் 8,800 போ் கருப்புப் பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதற்கேற்ப மருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளாா். தமிழகத்தில் கருப்புப் பூஞ்சை தொற்றால் 40 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். 140 குப்பிகள் ஆம்ஃபோடெரிசின்-பி மருந்து தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாட்டிலேயே மிக அதிகமாக குஜராத்தில் 2,281 பேரும், அதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரத்தில் 2,000 பேரும், ஆந்திர பிரதேசத்தில் 910 பேரும் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.