ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

தில்லியில் மே 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு

தில்லியில் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படுவதாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளார். 

News image
அரவிந்த் கேஜரிவால்
Updated On :23 மே 2021, 6:52 am

DIN

தில்லியில் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படுவதாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளார். 

கரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக தில்லியில் கடந்த ஏப்ரல் மாதம் 19-ஆம் தேதியிலிருந்து முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.  ஒவ்வொரு வாரமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில் மே 24 (திங்கள்கிழமை) முடிவடைய இருந்த ஊரடங்கு மேலும் ஒருவாரம் நீட்டிக்கப்படுவதாக முதல்வா் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

அதன்படி, மே 31 ஆம் தேதி (திங்கள்) காலை வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. முழு ஊரடங்கு காரணமாக தில்லியில் கரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக முதல்வர் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் மே இறுதியில் கரோனா பரவல் எப்படி இருக்கிறது என்பதைப் பொருத்து அடுத்த மாதம் தளர்வுகள் அறிவிக்கப்படுவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.