மேற்குவங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவுக்கு தொடர் சிகிச்சை

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மேற்குவங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேற்குவங்க முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான புத்ததேவ் பட்டாச்சார்யாவுக்கும் அவரது மனைவிக்கும் கடந்த 19ஆம் தேதி கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து அவருக்கு கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவரது உடல்நிலையில் தொடர்ந்து எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததைத் தொடர்ந்து மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

அவருக்கு தொடர் சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2000 முதல் 2011-ஆம் ஆண்டு வரையிலும் மேற்கு வங்க முதல்வராக இருந்த புத்ததேவ், உடல்நல பாதிப்பு காரணமாக பொதுவாழ்வில் இருந்து விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com