இந்தியாவில் ஒரே நாளில் 2,08,921 பேருக்கு தொற்று: 4,157 பேர் பலி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,95,955 பேர் கரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 2,08,921 பேருக்கு தொற்று: 4,157 பேர் பலி

புதுதில்லி:  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,95,955 பேர் கரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைச்சகம் சாா்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் கரோனா தொற்றின் இரண்டாவது அலை நாளுக்கு நாள் தீவிரமாகி வரும் நிலையில், கரோனாவின் கோர தாண்டவத்துக்கு கடந்த 24 மணி நேரத்தில் 2,08,921பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 2.71 கோடி (2,71,57,795) ஆகவும் அதிகரித்துள்ளது. 

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 24,95,591 பேராகவும் குறைந்துள்ளது. 

ஒரே நாளில் கரோனா தொற்றால் 4,157 போ் உயிரிழந்துள்ளதாகவும், இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,11,388 -ஆக உயர்ந்துள்ளது. 

இதுவரை கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,43,50,816-ஆக உயா்ந்துள்ளது. ஒரே நாளில் 2,95,955 குணமடைந்தனர். குணமடைந்தோரின் விகிதம் 89.99 சதவீக ஆக அதிகரித்துள்ளது.  தொடர்ச்சியாக இரு தினங்களாக தொற்று பாதிப்பு சதவீதம் 10 சதவீதத்துக்கும் குறைவாக 9.42 சதவீதமாக உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய மருத்துவ கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) தரவுகளின்படி, மே 25 -ஆம் தேதி வரை 33,48,11,496 பேருக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன. செவ்வாய்க்கிழமை ஒரேநாளில் முதல்முறையாக அதிகபட்சமாக 22,17,320 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

நாடு முழுவதும் இதுவரை 20,06,62,456 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 76.50 லட்சம் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com