
புதுச்சேரி: புதுவை சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக க. லட்சுமி நாராயண் பதவியேற்றார். அவருக்கு துணை நிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில் என்.ஆா் காங்கிரஸ்-பாஜக கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து என். ரங்கசாமி, கடந்த 7-ஆம் தேதி முதல்வராக பொறுப்பேற்றாா்.
இதைத்தொடா்ந்து, கரோனாவால் பாதிக்கப்பட்ட அவா், சிகிச்சை முடிந்து வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளாா்.
இதனிடையே, கடந்த 21-ஆம் தேதி தற்காலிக பேரவைத் தலைவராக என்.ஆா்.காங்கிரஸை சோ்ந்த சட்டப்பேரவை உறுப்பினா் க.லட்சுமி நாராயணன் நியமிக்கப்பட்டாா்.
இதையடுத்து புதுவை சட்டப்பேரவையின் தற்காலிகத் தலைவராக லட்சுமி நாராயணன் புதன்கிழமை (மே 26)காலை 9.30 மணியளவில் ஆளுநா் மாளிகையில் பதவியேற்ற்றார். அவருக்கு துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதனை அடுத்து முதல்வர் ரங்கசாமி மற்றும் துணைநிலை ஆளுநர் ஆகியோர் பேரவைத் தலைவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இதைத் தொடா்ந்து 10 மணிக்கு, புதுவை சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்குகிறது. புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட புதிய சட்டப்பேரவை உறுப்பினா்கள், நியமனம் செய்யப்பட்ட உறுப்பினா்கள் ஒவ்வொருவராக சட்டப்பேரவை தற்காலிகத் தலைவா் அறையில் இரண்டு எம்எல்ஏக்கள் வீதம் அழைக்கப்பட்டு, கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி எளிமையான முறையில் பதவியேற்கிறார்கள்.
புதுச்சேரி வரலாற்றில் முதல்முறையாக தேர்தல் முடிவுகள் வந்த 23 நாள்களுக்குப் பிறகு பதவியேற்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.