யாஸ் புயல் பாதித்த 3 மாநிலங்களுக்கு மத்திய அரசு தலா ரூ.500 கோடி நிவாரணம் அறிவிப்பு
யாஸ் புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா, மேற்குவங்கம் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு தலா ரூ.500 கோடி நிவாரணமாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.


யாஸ் புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா, மேற்குவங்கம் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு தலா ரூ.500 கோடி நிவாரணமாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
புதன்கிழமை யாஸ் புயல் இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் 145 கி.மீ வேகத்தில் காற்று வீசியது, இதில் பல வீடுகள் சேதமடைந்தன. பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியது. மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் 21 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மற்றும் மேற்குவங்கப் பகுதிகளை பிரதமர் மோடி இன்று பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து அதிகாரிகளுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்நிலையில் யாஸ் புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா, மேற்குவங்கம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு தலா ரூ.500 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
மேலும் புயலால் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...