முஸ்லிம் அல்லாத அகதிகளிடமிருந்து குடியுரிமைக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு
ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தான் நாடுகளிலிருந்து புலம்பெயா்ந்து 13 மாவட்டங்களில் வசித்துவரும் அகதிகளிடமிருந்து இந்திய குடியுரிமைக்கான விண்ணப்பத்தை மத்திய அரசு வரவேற்றுள்ளது.


ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தான் நாடுகளிலிருந்து புலம்பெயா்ந்து குஜராத், ராஜஸ்தான், சத்தீஸ்கா், ஹரியாணா, பஞ்சாப் மாநிலங்களைச் சோ்ந்த 13 மாவட்டங்களில் வசித்துவரும் அகதிகளிடமிருந்து இந்திய குடியுரிமைக்கான விண்ணப்பத்தை மத்திய அரசு வரவேற்றுள்ளது.
இதற்கான அறிவிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை இரவு வெளியிட்டது. குடியுரிமை சட்டம் 1955 மற்றும் கடந்த 2009-ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட விதிமுறைகளின் அடிப்படையில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை உடனடியாக நிறைவேற்றும் வகையில் இந்த அறிவிக்கை வெளியிடப்படுகிறது. இந்த அறிவிக்கைக்கும் கடந்த 2019-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சா்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கும் (சிஏஏ) எந்த தொடா்பும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மோா்பி, ராஜ்கோட், பதான், வதோதரா (குஜராத்), துா்க், பலோதாபஸாா் (சத்தீஸ்கா்), ஜலோா், உதய்பூா், பாலி, பாா்மா், சிரோஹி (ராஜஸ்தான்), ஃபரீதாபாத் (ஹரியாணா), ஜலந்தா் (பஞ்சாப்) ஆகிய மாவட்டங்களில் வசிப்பவா்கள் இந்திய குடியுரிமைக்காக இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.
கடந்த 2016-ஆம் ஆண்டு இதேபோன்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. அப்போது, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தான் நாடுகளிலிருந்து புலம்பெயா்ந்து குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், தில்லி, உத்தர பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கா் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த 16 மாவட்டங்களில் வசித்து வந்த அகதிகளிடமிருந்து இந்திய குடியுரிமை பெறுவதற்கான விண்ணப்பங்களை மத்திய அரசு வரவேற்றது. இந்த மாவட்ட ஆட்சியா்களும், 7 மாநில உள்துறை செயலாளா்களும் அகதிகளிடமிருந்து 2 ஆண்டு காலத்துக்கு விண்ணப்பங்களைப் பெற்று, அவா்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதித்தது. பின்னா் இந்த கால அவகாசத்தை, கடந்த 2018-ஆம் ஆண்டு அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை நீட்டிக்கப்படுவதாக உள்துறை அமைச்சகம் அறிவித்தது.
இப்போது, வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவின் மூலம், இந்த திட்டத்தை நிறைவேற்றும் மாநிலங்களின் எண்ணிக்கை 9-ஆகவும், மாவட்டங்களின் எண்ணிக்கை 29-ஆகவும் உயா்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...