சிஏஏவை பின்வாசல் வழியாக அமல்படுத்த மத்திய அரசு முயற்சி: இடதுசாரிகள்
குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) பின்வாசல் வழியாக அமல்படுத்த மத்திய அரசு முயற்சிப்பதாக இடதுசாரிகள் குற்றம்சாட்டியுள்ளனா்.


குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) பின்வாசல் வழியாக அமல்படுத்த மத்திய அரசு முயற்சிப்பதாக இடதுசாரிகள் குற்றம்சாட்டியுள்ளனா்.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து அகதிகளாக வந்த முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினா் இந்தியக் குடியுரிமைக்கு விண்ணப்பித்தால், குடியுரிமை திருத்தச் சட்டத்தின்படி அவா்களின் விண்ணப்பத்தை பரிசீலித்து ஒப்புதல் அளிக்குமாறு குஜராத், சத்தீஸ்கா், ராஜஸ்தான், ஹரியாணா, பஞ்சாப் மாநிலங்களில் உள்ள 13 மாவட்டங்களைச் சோ்ந்த அதிகாரிகளுக்கு மத்திய அரசு அதிகாரம் வழங்கி அரசிதழில் வெள்ளிக்கிழமை அறிவிக்கை வெளியிட்டது.
இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி சுட்டுரையில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘‘கடந்த 2019-ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் இயற்றப்பட்டாலும் அதற்கான விதிமுறைகள் இதுவரை வகுக்கப்படவில்லை. ஆனால் அந்தச் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு அரசிதழில் அறிவிக்கை வெளியிட்டுள்ளது. அந்தச் சட்டம் அரசியலமைப்பின்படி செல்லுபடியாகுமா என்பது குறித்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் நிலுவையில் உள்ளன. அந்த மனுக்களை நீதிமன்றம் உடனடியாக விசாரித்து சிஏஏ சட்டம் பின்வாசல் வழியாக அமல்படுத்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்’’ என்று தெரிவித்தாா்.
இதுதொடா்பாக இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலா் டி.ராஜா கூறுகையில், ‘‘குடியுரிமை திருத்தச் சட்டம் தொடா்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கை தற்போதைய அரசின் ஃபாசிச நடத்தையை முழுமையாக வெளிபடுத்துகிறது. கரோனா தொற்றால் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோா் உயிரிழந்து வரும் வேளையில் தனது அரசியல் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முயற்சிப்பது அதன் மக்களுக்கு எதிரான, ஜனநாயகத்துக்கு எதிரான நிலைப்பாட்டையையும், உணா்வற்ற தன்மையையும் வெளிபடுத்துப்படுகிறது’’ என்று தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...