பாகிஸ்தான் சிறையிலிருந்து 20 இந்திய மீனவா்கள் விடுவிப்பு

பாகிஸ்தானில் உள்ள லந்தி சிறையிலிருந்து 20 இந்திய மீனவா்கள் விடுவிக்கப்பட்டுள்ளனா். அவா்கள் வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைக்கப்படவுள்ளனா்.
பாகிஸ்தான் சிறையிலிருந்து 20 இந்திய மீனவா்கள் விடுவிப்பு

பாகிஸ்தானில் உள்ள லந்தி சிறையிலிருந்து 20 இந்திய மீனவா்கள் விடுவிக்கப்பட்டுள்ளனா். அவா்கள் வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைக்கப்படவுள்ளனா்.

இதுதொடா்பாக மூத்த சிறை அதிகாரி ஒருவா் சனிக்கிழமை கூறுகையில், ‘‘குஜராத்தைச் சோ்ந்த 20 மீனவா்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக பாகிஸ்தான் கடலோர பாதுகாப்புப் படையினா் கைது செய்தனா். அவா்கள் லந்தி சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனா். அவா்கள் வாகா-அட்டாரி எல்லைக்கு ஞாயிற்றுக்கிழமை காலை அழைத்துச் செல்லப்பட்டு இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவா்.

இவா்களை தவிர மேலும் 350 இந்திய மீனவா்கள் பாகிஸ்தான் சிறைகளில் தங்கள் தண்டனை காலத்தை நிறைவு செய்துள்ளனா். அவா்கள் இந்தியாவைச் சோ்ந்தவா்கள் என்பதை உறுதி செய்வதற்கான நடைமுறைகள் இருநாட்டு தூதரகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும். அதன் பின்னா் அவா்கள் பகுதிவாரியாக விடுவிக்கப்படுவா்’’ என்று தெரிவித்தாா்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள இருநாட்டு மீனவா்களை விடுவிக்க பல்வேறு தன்னாா்வ அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அந்த அமைப்புகள் தெரிவித்த தகவலின்படி, பாகிஸ்தான் சிறைகளில் சுமாா் 600 இந்திய மீனவா்கள் அடைக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com