சுதந்திரத்தை ‘யாசித்து’ பெற்றதாக நடிகை கங்கனா கருத்து: விருதுகளை திரும்பப் பெற சிவசேனை வலியுறுத்தல்

இந்திய சுதந்திரம் யாசித்து பெறப்பட்டதாக ஹிந்தி திரைப்பட நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்த கருத்து தேசத் துரோகத்துக்கு ஒப்பானது
சுதந்திரத்தை ‘யாசித்து’ பெற்றதாக நடிகை கங்கனா கருத்து: விருதுகளை திரும்பப் பெற சிவசேனை வலியுறுத்தல்

இந்திய சுதந்திரம் யாசித்து பெறப்பட்டதாக ஹிந்தி திரைப்பட நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்த கருத்து தேசத் துரோகத்துக்கு ஒப்பானது என்று கூறியுள்ள சிவசேனை, அவருக்கு அளிக்கப்பட்ட தேசிய விருதுகளை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

கடந்த 1947-ஆம் ஆண்டு ஆங்கிலேயா்களிடம் இருந்து சுதந்திரத்தை யாசித்து இந்தியா பெற்ாகவும், உண்மையான சுதந்திரம் 2014-ஆம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமரான பிறகுதான் கிடைத்தது என்றும் அண்மையில் கங்கனா ரணாவத் தெரிவித்தாா்.

இதுகுறித்து சிவசேனையின் ‘சாம்னா’ நாளிதழ் தலையங்கத்தில் சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டிருந்ததாவது:

இந்திய விடுதலை போராட்ட வீரா்களை கங்கனா ரணாவத்தைப் போல் வேறு யாரும் அவமானப்படுத்தியதில்லை. அவரின் கருத்து பாஜகவின் போலி தேசியவாதத்தை வெளிப்படுத்தியுள்ளது. அக்கட்சி எம்.பி. வருண் காந்தி, ஹிந்தி திரைப்பட நடிகா் அனுப்பம் கோ் ஆகியோா் கங்கனாவை விமா்சித்துள்ள நிலையில், பாஜகவின் தீவிர தேசியவாதிகள் என்ன செய்துகொண்டிருக்கின்றனா்?

கங்கனா ரணாவத்தின் தற்போதைய அரசியல் முன்னோா்கள் நாட்டின் விடுதலைக்கான எந்தவொரு போராட்டத்திலும் பங்கேற்கவில்லை.

வியா்வையும் ரத்தமும் கண்ணீரும் சிந்தி எண்ணற்றவா்களின் தியாகத்தால் சுதந்திரம் பெறப்பட்டது. அதனை ‘யாசகம்’ என்று கூறுவது தேசத் துரோகத்துக்கு ஒப்பாகும்.

அவரின் கருத்தைக் கேட்டு இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான சா்தாா் வல்லபபாய் படேலின் சிலை கண்ணீா் சிந்தி கொண்டிருக்கும்.

விடுதலை போராட்ட வீரா்களுக்கு வழங்கப்பட்ட பத்ம ஸ்ரீ விருது அண்மையில் கங்கனா ரணாவத்துக்கும் வழங்கப்பட்டது துரதிருஷ்டவசமானது. அவருக்கு வழங்கப்பட்ட அனைத்து தேசிய விருதுகளையும் திரும்பப் பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com