லக்கிம்பூர் வன்முறை: விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்

லக்கிம்பூர் வன்முறை விவகாரத்தை விசாரணை செய்யும் குழுவை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ராகேஷ் குமார் ஜெயினை நியமனம் செய்து உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்
Published on
Updated on
1 min read


லக்கிம்பூர் வன்முறை விவகாரத்தை விசாரணை செய்யும் குழுவை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ராகேஷ் குமார் ஜெயினை நியமனம் செய்து உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரியில், கடந்த மாதம் அக்டோபர் 3 ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது கார் ஏற்றப்பட்ட சம்பவத்திலும் அதை தொடர்ந்து நடந்த கலவரத்திலும் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா உட்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், எதிர்க்கட்சிகள் அழுத்தம் தரவே காவல் துறையினர் ஆசிஷ் மிஸ்ராவை கைது செய்த சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.பி.ரமணா தலைமையிலான குழு, கடந்த திங்கள்கிழமை வெளியிட்ட உத்தரவில் மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்க வேண்டும் எனவும் இந்த குழுவை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதி நியமிக்கப்படுவார் எனவும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், சிறப்பு விசாரணை குழுவானது நேர்மையாகவும், உண்மையாகவும், வெளிப்படையாகவும் இயங்குகிறாதா என கண்காணிக்க பஞ்சாப் - ஹரியாணா நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற நீதிபதியான ராகேஷ் குமார் ஜெயின் நியமிக்கப்படுகிறார் என தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com