எஸ்பிஐ வாடிக்கையாளர்களே.. ஷேரிங் நல்லது கிடையாதாம்

வங்கி மோசடி, கிரெடிட் கார்டு மோசடி, ஏடிஎம் மோசடி எனற நாள்தோறும் மோசடிகள் குறித்து காவல்துறை தரப்பிலும் வங்கிகள் தரப்பிலும் எச்சரிக்கை செய்திகள் வந்து கொண்டேதான் இருக்கின்றன.
எஸ்பிஐ வாடிக்கையாளர்களே.. ஷேரிங் நல்லது கிடையாதாம்
எஸ்பிஐ வாடிக்கையாளர்களே.. ஷேரிங் நல்லது கிடையாதாம்


வங்கி மோசடி, கிரெடிட் கார்டு மோசடி, ஏடிஎம் மோசடி எனற நாள்தோறும் மோசடிகள் குறித்து காவல்துறை தரப்பிலும் வங்கிகள் தரப்பிலும் எச்சரிக்கை செய்திகள் வந்து கொண்டேதான் இருக்கின்றன.

அதற்கு ஈடாக.. இல்லை இல்லை. அதற்கு மேலாக மோசடிகள் குறித்தும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. மோசடிகளை கண்டுபிடித்து எச்சரித்து அவை மக்களுக்குச் சென்றடைவதற்குள் பல மோசடிகள் நடந்தேறிவிடுகின்றன. அடுத்து என்ன புதிய மோசடிகளைக் கண்டுபிடித்து அதனையும் நிறைவேற்றி விடுகிறார்கள் மோசடியாளர்கள்.

ஆனால், எத்தனை எச்சரிக்கைக் கொடுத்தாலும் மோசடிகளிலிருந்து மக்களை காப்பாற்றுவது இயலாமல் உள்ளது. காரணம், அவ்வளவு நம்பிக்கையான வகையில் மோசடியை அரங்கேற்றுகிறார்கள்.

இதைச் செய்யவே செய்யாதீர்கள்!

  • பகிர வேண்டாம்.. வங்கிக் கணக்கு விவரங்களை
  • கிளிக் செய்ய வேண்டாம்.. நன்கு தெரியாத இணைய முகவரிகளை
  • பதில் வேண்டாம்.. போலியான வங்கி மின்னஞ்சல் முகவரிகளுக்கு
     

இம்முறை எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு விடியோவுடன் எச்சரிக்கைச் செய்தியை வெளியிட்டுள்ளது. அதில், பகிர்தல் எப்போதுமே நல்லதாக இருப்பதில்லை. எனவே, வாடிக்கையாளர்களே, உங்களது வங்கிக் கணக்கு விவரங்கள், ஏடிஎம் அல்லது யுபிஐ பின் விவரங்களை எப்போதும் யாருடனும் பகிர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்ல, எஸ்பிஐ வங்கியிலிருந்து யாரும் உங்களை தொலைபேசியில் அழைத்து வங்கி தொடர்பான விவரங்களைக் கேட்க மாட்டார்கள் என்றும், உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து மோசடியாக பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தால் தெரிவிக்க வேண்டிய உதவி எண் உள்ளிட்டவற்றையும் வங்கி அறிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com