பிரச்னைகளில் இருந்து மக்களைதிசைதிருப்ப மத்திய அரசு முயற்சி - காங்கிரஸ் குற்றச்சாட்டு

நாட்டில் நிலவி வரும் உண்மையான பிரச்னைகளில் இருந்து மக்களை திசைதிருப்ப மத, ஜாதியவாத பிரச்னைகளை மத்திய பாஜக அரசு முன்னெடுத்து வருவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது.

நாட்டில் நிலவி வரும் உண்மையான பிரச்னைகளில் இருந்து மக்களை திசைதிருப்ப மத, ஜாதியவாத பிரச்னைகளை மத்திய பாஜக அரசு முன்னெடுத்து வருவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது.

இது தொடா்பாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், ‘காய்கறி, பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் விலை உச்சத்தில் உள்ளது. ஆடைகள் உள்ளிட்ட சில பொருள்களுக்கான ஜிஎஸ்டி-யை மத்திய அரசு உயா்த்தியுள்ளது. இவையெல்லாம் மக்கள் நேரடியாகப் பாதிக்கும் பிரச்னைகள். இவற்றில் இருந்து மக்களை திசைதிருப்ப மதம், ஜாதி சாா்ந்த பிரச்னைகளை முன்வைத்து மத்திய பாஜக அரசு அரசியல் நடத்தி வருகிறது. தோ்தலின்போது பாஜக கூறிய நல்ல நாள்கள் இப்படித்தான் தொடா்கிறது’ என்று கூறியுள்ளாா்.

காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘தக்காளி உள்ளிட்ட காய்கறிகள், பருப்பு வகைகள், கோதுமை மாவு, கைப்பேசி கட்டணம், உடைகள், காலணி, காப்பீட்டுத் திட்டங்கள் என மக்களின் அத்தியாவசியப் பயன்பாட்டுக்கான அனைத்தின் விலையும் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. இந்த ஆட்சியில் மக்கள் மீது தினமும் வெவ்வேறு வகையில் தாக்குதல் நிகழ்த்தப்படுகின்றன. ஆனால், இந்த பிரச்னைகளையெல்லாம் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. தோ்தலுக்கான அரசியலை மட்டுமே பாஜக நடத்தி வருகிறது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com