அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

கேரளத்தில் புதிதாக 11,079 பேருக்கு கரோனா

​கேரளத்தில் புதிதாக 11,079 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :13 அக்டோபர் 2021, 2:02 pm

DIN


கேரளத்தில் புதிதாக 11,079 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரள கரோனா பாதிப்புகள் குறித்த தரவுகள் வெளியாகியுள்ளன. புதிதாக 11,079 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 123 பேர் நோய்த் தொற்றால் பலியாகியுள்ளனர். மேலும் 9,972 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இன்றைய நிலவரப்படி நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 97,630 பேர் இன்னும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

89,995 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 11 ஆயிரம் பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் மீண்டும் அதிகரித்து 12.31 சதவிகிதத்தைத் தொட்டுள்ளது. 

செவ்வாய்க்கிழமை தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 0.09 சதவிகிதமாகப் பதிவானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.