
உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் 40 சதவீத தொகுதிகளில் பெண்கள் போட்டியிட காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
உத்தரகண்ட், உத்தரப்பிரதேசம், கோவா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்தாண்டு முதல் பாதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பலமுனைப் போட்டிகள் நிலவி வருகின்றன.
இந்நிலையில் பிரியங்கா காந்தி இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியது:
“உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 400 தொகுதிகளில் 40 சதவீதத்தை பெண்கள் போட்டியிட காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.”
கடந்த தேர்தலில் 7 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில், பெண்களின் வாக்குகளை கவரும் விதமாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.