தில்லியில் மேலும் 38 பேருக்கு கரோனா தொற்று
தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 38 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 38 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லி கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 55,909 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 38 பேருக்கு மட்டுமே நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 0.07 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.
மேலும் 08 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒருவர் கரோனாவால் உயிரிழந்துள்ளார்.
இதையும் படிக்க | நவம்பர் இறுதியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடருக்கு வாய்ப்பு
இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 14,39,526 ஆக உயர்ந்துள்ளது. இதில் 14,14,095 பேர் குணமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை 25,091 ஆக உள்ளது.
இன்றைய நிலவரப்படி 340 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...