மேற்கு வங்கத்தில் நவ.15 முதல் பள்ளிகள் திறப்பு: முதல்வர் மம்தா

மேற்கு வங்கத்தில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நவம்பர் 15இல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி(கோப்புப்படம்)
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி(கோப்புப்படம்)

மேற்கு வங்கத்தில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நவம்பர் 15-இல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

கரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், தொற்று படிப்படியாக குறைவதையடுத்து தளர்வுகளை மாநில அரசுகள் அறிவித்து வருகின்றனர். இந்நிலையில், மேற்குவங்கத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் மம்தா இன்று அறிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் மம்தா பேசுகையில்,

“9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கு நவம்பர் 15-இல் பள்ளிகள் திறக்கப்படும்.

மேலும், பஞ்சாப் அரசை போலவே நாங்களும் எல்லைப் பாதுகாப்பு படையின் எல்லை விரிவாக்கத்திற்கு எதிராக போராடி வருகிறோம். எங்கள் எல்லைப் பகுதி முழுவதும் அமைதியான சூழல் நிலவி வருகின்றன. சட்டம் - ஒழுங்கு என்பது காவல்துறையின் பணி. மாநில அரசுசின் சட்டங்களின் அடிப்படையிலேயே மாநில அரசுகள் செயல்படும்.”

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com