காஷ்மீர் பனிப்பொழிவை தேசியப் பேரிடராக அறிவித்தனர்

காஷ்மீரில் தொடர்ந்து வரும் கடும் பனிப்பொழிவால் ஆப்பிள் உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதால் அதனை தேசியப் பேரிடராக அறிவித்துள்ளதாக அம்மாநில துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்திருக்கிறார
காஷ்மீர் பனிப்பொழிவை தேசியப் பேரிடராக அறிவித்தனர்
காஷ்மீர் பனிப்பொழிவை தேசியப் பேரிடராக அறிவித்தனர்

காஷ்மீரில் தொடரும் கடும் பனிப்பொழிவால் ஆப்பிள் உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதால் அதனை தேசியப் பேரிடராக அறிவித்துள்ளதாக அம்மாநில துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்திருக்கிறார்.

காஷ்மீர் மாநிலத்தில் இந்தாண்டு நிகழ்ந்து வரும் பனிபொழிவால் பல பகுதிகள் பனியால் மூடப்பட்டும் , ஆப்பிள் தோட்டங்களில் ஆப்பிள்கள் விழுந்து வீணாவதாலும் விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்து வருகிறார்கள். இதனால் இழப்பீடு கேட்டு தொடர்ந்து முறையிட்டு வந்தனர்.

இந்நிலையில் ஆப்பிள் திருவிழாவை ஆரம்பித்து வைத்த ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, ‘ காஷ்மீரில் ஏற்படும் அதீத பனிப்பொழிவை தேசியப் பேரிடராக அரசு அறிவித்துள்ளது. ஆப்பிள் தோட்டங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் ‘ எனத் தெரிவித்திருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com