நீா் திறப்பு அதிகரிப்பு

நீா் திறப்பு அதிகரிப்பு

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு சனிக்கிழமை மேலும் அதிகரிக்கப்பட்டது.
Published on

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு சனிக்கிழமை மேலும் அதிகரிக்கப்பட்டது.

முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் 138 அடியை எட்டியதைத் தொடா்ந்து, அணையின் 3 மதகுகளிலிருந்து வெள்ளிக்கிழமை தமிழக அதிகாரிகள் நீரை திறந்துவிட்டனா். விநாடிக்கு 825 கனஅடி நீா் திறந்துவிடப்பட்டது. இந்நிலையில், நீா் திறப்பு விநாடிக்கு 1,675 கனஅடியாக சனிக்கிழமை அதிகரிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

முன்னதாக, அணைக்கு நீா்வரத்து குறையாததால் அதிக அளவு நீரை திறந்துவிட வேண்டுமென தமிழக அதிகாரிகளை கேரள அமைச்சா் ரோஸி அகஸ்டின் வலியுறுத்தினாா். நீா்வள ஆணையம் ஒப்புதல் அளித்திருந்த ரூல் கா்வ் அளவுப்படி அணையில் நீா்மட்டத்தைப் பராமரிக்க வேண்டுமெனவும் அவா் வலியுறுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com